கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
உன் முக அன்பில் உருகிப்பொகிறேன் எந்தன் மனம் உன் நினைவைப் பாட கேட்கிறேன்
உன்னைக் கண்டபின் என்ன வெண்டுவென் என்ன வெண்டுவேன் யேசு தெய்வமே
உன்னை நான் பிரியா வரமாய் வருவாய் அருள் புரிவாய்
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
என்னை நீயும் அன்பு செய்யும் அளவைத் தேடினேன்
உந்தன் அன்பு முடிவில்லாது நீண்டு போவதேன்
மண்டியிட்டு எனது பாதம் கழுவிச் சொன்ன உன்
அன்பின் பாடம் ஆழம் கண்டு கண்கள் கலங்குதே
இந்தப் பாடம் விளக்கம் காண சிகரம்
ஏறினேன்
சிகரத்திலே விரிந்த கரங்கள் விளக்கம் சொல்லுதே
இறைவன் நீதான் என நான் மனதால் சரணடைந்தேன்
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
விழிகள் மூடி மௌனமாய் உன் இதயம் சாய்கிறேன்
துடிக்கும் உனது இதய ஒலியில் தூங்கிப்போகிறேன்
உனது கண்கள் காட்டும் கருணை மனதில் தேக்கினேன்
மனது உனது குரலுக்காக ஏங்கி விழிக்கிறேன்
குரலைக் கேட்க ஏக்கத்தோடு உனையே தேடினேன்
உனது அழகுக் குரலும் எனக்குள்
ஓலிக்கக் கேட்கிறேன்
இறைவா இறைவா முழுதும் உனதாய் மாறுகிறேன்
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
உன் முக அன்பில் உருகிப்பொகிறேன் எந்தன் மனம் உன் நினைவைப் பாட கேட்கிறேன்
உன்னைக் கண்டபின் என்ன வெண்டுவென் என்ன வெண்டுவேன் யேசு தெய்வமே
உன்னை நான் பிரியா வரமாய் வருவாய் அருள் புரிவாய்
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
0 Comments